விண்வெளி பயணம் மேற்கொண்டு பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள்!
Aug 1, 2025, 11:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விண்வெளி பயணம் மேற்கொண்டு பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள்!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 12:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விண்வெளிப் பயணத்தில் சாதனை புரிந்து ஹீரோக்களாக திரும்பி வந்தவர்களும் உண்டு. எதிர்பாராத சூழலால் ஒரு சிலர் தங்கள் உயிரையே அறிவியல் ஆராய்ச்சிக்கு விலையாக கொடுத்துள்ளனர். விண்வெளியில் இருந்து உயிருடன் பூமிக்கு திரும்பாத விண்வெளி வீரர்கள் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் கடினமான செயல் மட்டுமல்ல, மிகவும் ஆபத்தான சவாலும் கூட என்பதில் சந்தேகமில்லை.

1960ம் ஆண்டிலிருந்து விண்வெளி ஆய்வின் வரலாறு தொடங்குகிறது. எண்ணற்ற விண்வெளி வீரர்கள் தங்கள் விலை மதிப்பில்லாத உயிரைப் பணயம் வைத்து, அறிவியல் வளர்ச்சிக்காக விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதுவரை  676 பேர் விண்வெளிக்குச் சென்றுள்ளனர். அவர்களில், 20 பேர் விண்ணிலேயே இறந்துள்ளனர். இது விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட மொத்த வீரர்களில் 2.8 சதவீதமாகும்.

1967ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி, விண்வெளிப் பயணத்துக்கு முந்தைய சோதனையின் போதே விண்வெளி ஓடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், விண்வெளியில் பறந்த இரண்டாவது அமெரிக்க விண்வெளி வீரரான கஸ் கிரிஸ்ஸம், விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்க விண்வெளி வீரரான எட்வர்ட் எச். வைட் மற்றும் ரோஜர் பி. சாஃபி ஆகிய 3 விண்வெளி வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

1967ம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி, சோயுஸ் 1 விண்கலத்தில் ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் கோமரோவ் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். துரதிர்ஷ்டவசமாக மீண்டும் பூமிக்குள் நுழையும் போது, ​​பாராசூட் அமைப்பு தோல்வியடைந்தது. இதனால், விளாடிமிர் கோமரோவ் விண்வெளி பயணத்தின் போது இறந்த முதல் விண்வெளி வீரர் ஆனார்.

அடுத்ததாக, 1971ம் ஆண்டு சோயுஸ் 11 மூலம் , உலகின் முதல் விண்வெளி நிலையமான சல்யுட் 1 லிருந்து விண்வெளி வீரர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர். தரையிறங்குவதற்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக விண்கலத்தில் இருந்த 3 விண்வெளி வீரர்களும் உயிரிழந்தனர். இதுவே விண்வெளியில் இருக்கும் போது விண்வெளி வீரர்கள் இறந்த முதல் சம்பவமாகும்.

1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி அன்று காலை 11:38 மணிக்கு அமெரிக்க விண்வெளி ஓடமான சேலஞ்சர் விண்ணில் செலுத்தப் பட்டது. செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே சரியாக 73 வினாடிகளில் வெடித்து சிதறியது. இந்த மிக மோசமான விபத்தில், விண்வெளிக்கு சென்ற முதல் குடிமகனான ஆசிரியை கிறிஸ்டா மெக்அலிஃப் உட்பட 7 விண்வெளி வீரர்கள் மரணமடைந்தனர்.

கல்பனா சாவ்லா, விண்வெளிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையைப் பெற்றவர். 2003ம் ஆண்டு, பிப்ரவரி 1 ஆம் தேதி, ‘கொலம்பியா’ என்ற விண்வெளி ஓடம் 15 நாட்கள் விண்வெளியில் பயணித்து, பூமிக்குத் திரும்பியது. கொலம்பியா விண்வெளி ஓடம் பழுதான காரணத்தால், அதில் பயணம் செய்த கல்பனா சாவ்லா, இஸ்ரேலின் முதல் விண்வெளி வீரர் உட்பட 7 வீரர்கள் உயிரிழந்தனர்.

கடந்த ஜூன் 6ம் தேதி, போயிங்கின் பழுதடைந்த ஸ்டார்லைனர் கேப்சூலில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்கள் பூமிக்குத் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். அவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஸ்பேஸ்எக்ஸ் வாகனம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட இரண்டு நாசா விண்வெளி வீரர்களும் பூமிக்கு திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது.

இதனால் எட்டுநாள் பணிக்காக விண்வெளிக்குச் சென்றவர்கள் எட்டு மாதங்கள் விண்வெளியில் செலவிட வேண்டிய ஆபத்தான சூழல் ஏற்பட்டுள்ளது.

Tags: space travelscientific researchspace shuttleEdward H. WhiteRoger B. Safi
ShareTweetSendShare
Previous Post

உளவுத்துறை உஷாராகவில்லை என்றால் வங்கதேசம் போல் தமிழகத்திலும் கலவரம் வெடிக்கும் – இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் எச்சரிக்கை!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

Related News

தம்பியை கழுத்தறுத்து கொலை : சகோதரர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை!

கிட்னியை விற்பனை செய்ததால் கடினமான வேலைகளை செய்ய முடியவில்லை – விசைத்தறி தொழிலாளர்கள் வேதனை!

இன்றைய தங்கம் விலை!

புதிய டிஜிபி நியமன விவகாரம் – மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு!

தனியார் நிதி நிறுவன ஊழியரகள் நூதன மோசடி – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பாஜக தொண்டர்கள்!

ஈரானுடன் வா்த்தகம் – 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படம் ரிலீஸ்!

கோவாவில் ஹோவர் கிராஃப் படகுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

காஞ்சிபுரத்தில் பெண் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு – முதல் குற்றவாளிகளுக்கு 31 ஆண்டுகள் சிறை!

மனிதர்களுக்கு மாற்றாக பணியாற்றும் அளவுக்கு ஏ.ஐ மேம்படவில்லை – ஸ்ரீதர் வேம்பு கருத்து!

யுபிஐ பண பரிவர்த்தனை புதிய விதிமுறை – இன்று முதல் அமல்!

கவினின் உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் சம்மதம் – போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு!

புதுக்கோட்டை பிலாக்குடிப்பட்டி தேவர் மலை குடைவரை கோயிலில் குருபூஜை விழா!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் கூட்டம் – காவலர்கள், பக்தர்களிடையே தள்ளுமுள்ளு!

பஹல்காம் தாக்குதலில் காயம் அடைந்த தமிழக மருத்துவர் – சிகிச்சை முடிந்து இல்லம் திரும்பினார்!

தமிழகத்தில் ஆணவ படுகொலை அதிகரிப்பு – கூட்டணி கட்சியான திமுக அரசு மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies