சென்னையில் “மகளிர் தர்பார் பெண்ணால் முடியும்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
சென்னையில் மகளிர் தர்பார் பெண்ணால் முடியும் என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பாஜக நிர்வாகி குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை சொந்தரராஜன் தெலங்கானாவில் பாலியல் தொந்தரவுகளால் பெண்கள் பாதிக்கப்பட்டார்கள், ஆனால் அரசு பெரிதாக கவனம் செலுத்தவில்லை என்று ஒரு பெண் அழுது கொண்டே கூறியதாக தெரிவித்தார். பின்னர் she என்ற இயக்கம் மூலம் அந்த பெண்களுக்கு தீர்வு கிடைத்ததாக தெரிவித்தார்.
பின்னர் பேசிய பாஜக நிர்வாகி குஷ்பு, தர்பார் என்று சொல்லும் போது ஆண்கள் தான் இருப்பார்கள், ஆனால் பெண்கள் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும் One of the most powerful women தமிழிசை சௌந்தரராஜன் என்றும் குஷ்பு கூறினார்.