இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
2 நாள் அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றார். அப்போது, அவரை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க் வரவேற்றார். இதனை தொடர்ந்து, சிங்கப்பூர் பாரம்பரியத்தின்படி பிரதமர் மோடிக்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.
பின்னர் இந்தியா – சிங்கப்பூர் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. செமி கண்டக்டர், டிஜிட்டல் டெக்னாலஜி, ஸ்கில் டெவலப்மெண்ட் உள்ளிட்ட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இதனை தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் தலைமையில், உயர்மட்டக் குழுவுடனான பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தமக்கு உற்சாக வரவேற்பு கொடுத்த சிங்கப்பூர் அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
4ஜி என்று சொல்லப்படும் பிரதமர் மற்றும் அவரது அமைச்சர்கள் தலைமையின் கீழ், சிங்கப்பூர் மேலும் வளர்ச்சி பெறும் எனக்கூறினார். மேலும், வளர்ந்து வரும் ஒவ்வொரு நாடுகளுக்கும் சிங்கப்பூர் ஊக்கமளிப்பதாக மோடி என தெரிவித்தார். இந்தியாவிலும் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம் என குறிப்பிட்ட அவர், இதற்காக இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.