நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமான “தி கோட்” வெளியான நிலையில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெட்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “தி கோட்” திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் கோட் படத்தின் முதல் காட்சி அதிகாலையிலேயே வெளியானது. இதனால் நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு பிரம்மாண்ட பேனர்கள் வைத்தும், பட்டாசுகள் வெடித்தும், மேள தாளங்களுடனும் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.