தமிழகம் முழுவதும் பதிவு செய்யப்பட்டுள்ள சாராய வழக்குகள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு குறித்து பதிவான வழக்கை சி.பி.ஐக்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள், கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அடுத்த சில நாட்களில் பணி வழங்கப்பட்டது எப்படி என கேள்வி எழுப்பினார்.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் எத்தனை சாராய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தும்,
விஷச்சாராய வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எப்படி மீண்டும் பணி வழங்கப்பட்டது என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.