தமிழ் ஜனம் செய்தி சேனல் தொடங்கி ஐந்தே மாதத்தில் நாடு முழுவதும் பிரபலமடைந்த நிலையில், விரைவில் தமிழகத்தின் முன்னணி சேனலாக உயரும் என ஆர்எஸ்எஸ் மக்கள் தொடர்பாளர் ராம் லால் தெரிவித்தார்.
சென்னையில் தமிழ் ஜனம் அலுவலகத்தைப் பார்வையிட்ட அவர் பின்னர் பேட்டியளித்தார். அப்போது தமிழ் ஜனம் செய்தி சேனல் உதயமானது மகிழ்ச்சியளிப்பதாகவும், 5 மாதத்தில் தமிழகம் மட்டுமன்றி, இந்தியா முழுவதும் தமிழ் ஜனம் சேனல் பிரபலமடைந்துள்ளதாக தெரிவித்தார்.,
தமிழ் ஜனம் ஊழியர்கள் அனைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், ஊழியர்கள் கடுமையாக உழைத்தால் தமிழகத்தின் முன்னிலை சேனலாக தமிழ் ஜனம் மாறும் என்றும் கூறினார்.
நாளிதழ்களுக்கு மத்தியில், தொலைக்காட்சி சேனலும் டிஜிட்டல் ஊடகமும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ராம் லால் தெரிவித்தார்.