டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் 4 தேர்வுகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 23 வகையான பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஜூன் 9-ம் தேதி நடத்தப்பட்ட இந்த தேர்வின் மூலம் 6 ஆயிரத்து 244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தேர்வின் முடிவுகளுக்காக தேர்வர்கள் காத்திருக்கக்கூடிய இந்த சூழலில் கூடுதலாக 480 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.