ஜார்க்கண்டில் புதிதாக 6 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிதாக வந்தே பாரத் ரயில்கள் பெர்ஹாம்பூர்-டாடா, ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-பனாரஸ், ஹவுரா-கயா மற்றும் ஹவுரா-பாகல்பூர் ஆகிய வழித்தடங்கள் இடையே இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், புதிதாக 6 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அனுமதி கடிதங்களை பிரதமர் மோடி வழங்கினார். மேலும் பயனாளிகளுக்கு முதல் தவணை உதவித்தொகையையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சந்தோஷ் கேங்வார் உள்பட ஏராளமான பயனாளிகள் கலந்துகொண்டனர்.