அடுத்த இரண்டு நாட்களில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தில் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், தாம் நேர்மையானவன் என்பதை நிரூபித்த பின்னரே மீண்டும் முதல்வர் இருக்கையில் அமர போவதாக கூறினார்.
பொதுமக்களின் மகத்தான ஆதரவுடன் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறும் என அரவிந்த் கெஜ்ரிவால் நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லி சட்டப் பேரவைத் தேர்தல் பிப்ரவரியில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், அதே சமயம் மகாராஷ்டிர பேரவைத் தேர்தல் நவம்பரில் நடைபெறும் சூழலில், அதனுடன் சேர்த்து டெல்லிக்கும் தேர்தல் நடத்த தாம் பரிந்துரைப்பதாகவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.
தாம் பதவி விலகும் பட்சத்தில், டெல்லியின் அடுத்த முதல்வரை கட்சி எம்எல்ஏக்கள் கூடி 3 நாளில் தேர்வு செய்வர் என்றும் அவர் கூறினார்.