கன்னியாகுமரி மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில், கேரளா பெண்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசத்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம்.
பெண்கள் தலையில் இருமுடி கட்டை சுமந்து சென்று பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு செல்வதால் இது பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.
இந்நிலையில், ஓணம் பண்டிக்கை முடிந்த நிலையில், மண்டைக்காடு கோயிலுக்கு குடும்பத்துடன் ஏராளமான கேரளா மக்கள் வந்திருந்தனர். கோயிலில் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர்.