கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே இலவசமாக பெட்ரோல் போட சொல்லி அடாவடியில் ஈடுபட்ட தலைமை காவலரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஆனைவாரியில் இயங்கிவரும் இந்தியன் பெட்ரோல் பங்குக்கு காரில் குடும்பத்துடன் சென்ற தலைமை காவலர் கோவிந்தராஜ், பெட்ரோல் போட சொல்லி ஊழியர்களை மிரட்டியுள்ளார்.
இதைக்கண்ட பெட்ரோல் பங்க்கின் மேலாளர் செல்வகுமார், காசு கொடுக்காமல் பெட்ரோல் போட்டால் தங்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியானதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென பெட்ரோல் பங்க் மேலாளர் செல்வகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.