திண்டுக்கல் மாவட்டம் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து பூம்பாறை செல்லும் பிரதான சாலையில் கிருஷ்ணன் கோவில் அருகே உள்ள சாலையோரத்தில் இருந்த மரம் கிழே சாய்ந்தது.
இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையில் இரு பகுதிகளிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் இணைந்து சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக மரம் விழுந்த சமயத்தில் எந்த ஒரு வாகனமும் வராததால் அதிர்ஷ்டவசமாக பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை.