சென்னை மெட்ரோ பணிகள் தாமதமாவதை தவிர்க்க, மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசால் நிதி வழங்க இயலவில்லை என கூறியுள்ள அவர், மத்திய அரசின் பங்களிப்புடன்தான் சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தை செயல்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் பெரிதும் பயனடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, மத்திய அரசு நிதியளிக்கவில்லை எனக்கூறி திமுக அரசியல் செய்து வருவதாக விமர்சித்துள்ளார்.
சென்னை மெட்ரோ ரயில் பணிகள் தாமதமாவதை தடுக்க மத்திய அரசு 50 சதவீத நிதிப் பங்களிப்பை வழங்க வேண்டுமென அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
















