முதலில் குடிபோதையில் பிரச்சனை செய்யும் கட்சிக்காரர்களை திருமாவளவன் கட்டுப்படுத்தட்டும் - பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்!
May 21, 2025, 09:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலில் குடிபோதையில் பிரச்சனை செய்யும் கட்சிக்காரர்களை திருமாவளவன் கட்டுப்படுத்தட்டும் – பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சனம்!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 02:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்களிடம் குடிபோதையில் பிரச்சனை செய்யும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கட்டுப்படுத்த முடியாமல் திருமாவளவன் மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் விமர்சித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை ஆய்வு கூட்டம் மயிலாடுதுறையில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆய்வு நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : தமிழகத்தில் பாஜ உறுப்பினர் சேர்க்கை பேரியக்கம் முழுவீச்சில் நடந்துகொண்டிருக்கிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் எந்த அளவிற்கு வீரியமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக வந்திருக்கிறேன்.

கடந்த 23ம் தேதி காரைக்கால் மாவட்ட பாஜக விவசாய அணி மாவட்ட செயலாளர் விஜயகுமார் குடும்பத்தோடு ஆந்திராவிற்கு குழந்தையின் சிகிச்சைக்காக சென்றுவிட்டு கடலூர் மாவட்டம் புவனகிரி வழியாக காரைக்கால் நோக்கி சென்றபோது விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்பகுதி ஒன்றிய செயலாளர் முல்லைமாறன் தலைமையில் குண்டர்கள் உச்சப்பச்ச குடிபோதையில் விஜயகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கி தரகுறைவாக பேசி பாஜக கொடியை கிழித்து பிரச்சனை செய்துள்ளனர்.

25ம் தேதி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் இதுவரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை. மோசமான செயலை செய்த சிசிடிவி காட்சியை கொடுத்த வணிகரை போலீசார் மிரட்டுகின்றனர். சமூக விரோத செயல்களை செய்கின்றவர்களுக்கு தமிழக காவல்துறை ஆதரவாக இருக்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

குடும்பத்தோடு செல்பவரை பிரச்சனை செய்ய வேண்டுமென்று திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா?. விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை முதலில் நடைமுறைப்படுத்தி, முல்லைமாறனை கட்சி பதவியில் இருந்து நீக்கிவிட்டு உங்கள் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள்.

விடுதலைசிறுத்தைகள் கட்சியினர் குடிபோதையில் பொதுமக்களிடம் பிரச்னை செய்கின்றனர். அதனைகட்டுப்படுத்தமுடியாமல் மதுஒழிப்பு மாநாடு நடத்துவது ஊருக்கு உபதேசம் செய்வதுபோல் உள்ளது.

காவல்துறையினர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாஜக சார்பில் காவல்துறை கண்டித்து போராட்டம் நடத்துவோம்.

கருணாநிதி காலத்தில் ஸ்டாலினை கொண்டுவந்தார்கள். அவர் கட்சியில் பல பதவிகள் வகித்து கருணாநிதியுடன் அரசியல் பயணத்தில் இருந்துள்ளார். உதயநிதி ஒரு நடிகர். திரைத்துறையில் பெரிய சாதனை படைத்தவர்கள் என்று சொல்ல முடியாது. வாரிசு அரசியல் திமுகவில் இருக்கும். அதனை திமுகவினர் ஒத்துகொள்கின்றனர். . எந்த நாற்காலியில் யார் இருந்தால் என்ன. வாரிசு அரசியல் மக்களாட்சி தத்துவதற்கு எதிரானது என அவர் தெரிவித்தார்.

 

Tags: thirumavalavanBJP State Secretary Aswathamandrunken issueMayiladuthurai
ShareTweetSendShare
Previous Post

பரமக்குடியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி!

Next Post

பவானி ஆற்றில் சிக்கித்தவித்த குடும்பத்தினர் – கயிறு கட்டி மீட்ட கிராம மக்கள்!

Related News

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

ஜூலை மாதம் முதல் மின் கட்டணம் உயர்வா? – அமைச்சரின் பதில் என்ன?

டெல்லி தனியார் பள்ளியில் தீ விபத்து!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு தக்க பதிலடி – ராஜ்நாத் சிங் பதிலடி!

இந்தியாவின் சுகாதார திட்ட நடைமுறைகளை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள தயார் – பிரதமர் மோடி

டாஸ்மாக் ஊழலில் முதல்வர், அன்பில் மகேஷ் குடும்பத்திற்கு தொடர்பு – ஹெச்.ராஜா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே கல்குவாரி விபத்து – 4 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு – இன்று வெளிநாட்டுக்கு புறப்படுகிறது எம்.பிக்கள் குழு!

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு!

அரக்கோணம் திமுக நிர்வாகி மீதான பாலியல் புகார் – காவல்துறை விளக்கம்!

அரக்கோணத்தில் திமுக நிர்வாகி மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி – காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக வேதனை!

டாஸ்மாக் மேல்முறையீட்டு மனு – உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

டாஸ்மாக் ஊழல் வழக்கு – அமலாக்கத்துறை விசாரணைக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுவதாக புகார்!

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies