ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக நடந்த போட்டியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர்.
சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்த மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.