அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரம், ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும் என, பாஜக மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் கேட்டது நியாயம். ஆனால் கூட்டணிக்கு மட்டும் தான் கட்சிகள் தேவை. அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கு கூடாது என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாடு முடிந்தவுடன் தமிழகத்தில் மது ஒழிந்துவிட்டதா, அது திமுகவும் விடுதலை சிறுத்தைகளும் நடத்திய நாடகம்.
மது உற்பத்தியாளர், விற்பனையாளர்கள்தான் இந்த மாநாட்டின் பங்காளியாக இருந்தார்கள், இது ஒரு நாடகம் தான் தவிர ஒரு உண்மையான மாநாடாக இல்லை. விஷச்சாராயத்தால் உயிரிழந்த விதவைகளை… கனிமொழி ஏன் சந்திக்கவில்லை, என்றும் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நீக்கியதை வரவேற்கிறேன். அவர் ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் இணைய வேண்டும். ஆர் எஸ் எஸ் வளர்ந்தால்தான் தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள், சமூக நீதி வேண்டும் என்றால் திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டும். திமுக என்பது இந்து விரோத அமைப்பு தான், அதன் இந்து விரோத கொள்கைகள் மாறாது என ஹெச்.ராஜா தெரிவித்தார்.
ஓபிஎஸ் பாஜகவின் ஒரு மதிப்புமிக்கவர். அவர் பாஜகவில் இணைவதற்கு முன்னதாக, அது தொடர்பாக எந்த ஒரு கருத்தும் கூற முடியாது என அவர் தெரிவித்தார்.
சட்டப்பிரிவு 365 சட்டத்தை பயன்படுத்திய பிறகு எந்தஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை, ராணுவத்தின் மீது மக்கள் தாக்குதல் நடத்தவில்லை. எனவே ஜம்மு காஷ்மீர் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதையே காட்டுகிறது. என அவர் தெரிவித்தார்.