கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கில் நீதியை நிலைநாட்டக்கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களை மேற்குவங்க மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் சந்தித்தார்.
அப்போது அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த ஆளுநர், போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசு அதிகாரிளிடம் மருத்துவர்களின் கோரிக்கைகளை எடுத்துச் சென்று நீதியை நிலைநாட்டப் போவதாக உறுதியளித்தார்.