பெரம்பலூர் அருகே தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் பணி தொடங்கியது.
இந்த திட்டத்தினை ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட காரை ஊராட்சியில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தொடங்கி வைத்தார்.
பனை விதை நடவுப் பணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.