மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கு தொடர்பாக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார்.
கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், நாம் தமிழர் கட்சியின் பரப்புரை கூட்டத்தில் ராஜீவ் காந்தி தொடர்பாக சீமான் சர்ச்சைகுரிய வகையில் பேசினார்.
இதையடுத்து விக்கிரவாண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ரமேஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், சீமான் நேரில் ஆஜரானார். தொடர்ந்து வழக்கு மீதான விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.