கர்நாடக மாநிலம் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில், 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு திடீர் சோதனையில் ஈடுபட்டது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவராக கருதப்படும் மாரிகவுடா, முடா தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சித்தராமையாவின் மனைவி பார்வதியிடம் கையகப்படுத்திய நிலத்துக்கு பதிலாக, மூடா ஒதுக்கிய 14 வீட்டு மனைகளின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதனைத்தொடர்ந்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு களத்தில் இறங்கியுள்ளது.
















