தவெக மாநாடு தொடர்பாக தொண்டர்களுக்கு அக்கட்சித்தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் மாநாட்டில் பங்கேற்பவர்கள் அனைவரும் அரசியல் ஒழுங்கையும், நெறிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் களத்தில் வாய் மொழியில் வித்தை காட்டுவது நமது வேலை இல்லை என்றும், செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர் சிறுமியர், முதியோர் ஆகியோரின் நலனை கருத்தில்கொண்டு அவர்கள் மாநாட்டில் பங்கேற்க வேண்டாம் எனவும், வீட்டில் இருந்தபடியே மாநாட்டில் கலந்துகொண்டு வாழ்த்துமாறும் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.