திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்ய ஸ்ரீவாரி மெட்டு வழியாக செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அந்த வகையில், 60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள், குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், ஆஸ்துமா,வலிப்பு, மூட்டுவலி உள்ளவர்கள் பயணிக்க வேண்டாம் என்றும், உடல்பருமன், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மலை ஏறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
அவசர மருத்துவ சிகிச்சை வேண்டுவோர் மலைப்பாதையில் 1500-வது
படிக்கட்டு, கலிகோபுரம் மற்றும் பாஸ்கர்ல சந்நிதி இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவக் குழுக்களை அணுகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.