திருவனந்தபுரம் அருகே கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் விபத்தில் சிக்கின.
கோட்டயத்திலிருந்து திருவனந்தபுரம் நோக்கி பினராயி விஜயன் வந்தபோது, வழியில் வாமனபுரத்தில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் திடீரென குறுக்கிட்டார். உடனடியாக பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம் நின்றதால், பின்னால் வந்த ஆம்புலன்ஸ் உள்ளிட்ட ஐந்து வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றின் மீது ஒன்று மோதின.
இதில் நல்வாய்ப்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்ட யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியானது. இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.