உதகை – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் வீட்டின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
உதகையில் உள்ள சுற்றுலா தலங்களை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பேர் உதகைக்கு காரில் சுற்றுலா வந்தனர்.
அப்போது,பிங்கர்போஸ்ட் பகுதியில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மோதி வீட்டின் மீது கவிழ்ந்தது.இதில் காரில் பயணித்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.