நாடு ஏழ்மையில் சிக்கி தவிக்க காங்கிரஸ் கட்சி தான் காரணம் எனவும் காங்கிரஸ் தமிழ் இனத்தின் வரலாற்றுப் பகைவன் எனவும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை ,வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்சத்தீவை தான் தோன்றித்தனமாக தாரைவார்த்து கொடுத்தது காங்கிரஸ் கட்சிதான் என குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர் என தெரிவித்தார்.
காவிரியிலிருந்து 400 டி.எம்.சி தண்ணீர் நிறுத்தப்பட்டபோது கருணாநிதி தொடர்ந்த வழக்கை இந்திராகாந்தி வாபஸ் பெற வைத்தார் எனவும் சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்.
மேலும், காங்கிரஸ் ஆட்சியின் போது சகிக்க முடியாத ஊழல் நடைபெற்றதாகவும் நாட்டிற்குள் அணு உலையை கொண்டு வந்தது ராகுல்காந்தியின் தந்தை ராஜிவ்காந்திதான் எனவும் காங்கிரஸ் கட்சி என அவர் விமர்சித்தார்.
தமிழ் இனத்தின் வரலாற்றுப் பகைவன் காங்கிரஸ் என்றும், திமுகவை ஊழல் கட்சி என விமர்சித்த விஜய், அதிமுக-வை பற்றி வாய் திறக்காதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று எனக்கூறுவது கேலிக்கூத்தானது என்றும் சீமான் தெரிவித்தார். அடிப்படை புரிதல் இல்லாமல் கொள்கைகள் பற்றி விஜய் பேசுவதாகவும் அவர் கூறினார்.