மதுரை டி.கல்லுப்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்ற முத்தாலம்மன் கோயில் சப்பர திருவிழாவில் லட்சக்கணக்கானேர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
மதுரை டி. கல்லுப்பட்டியை சுற்றியுள்ள ஏழு கிராமத்தினர் ஒன்றுகூடி சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில், முத்தாலம்மன் கோயில் சப்பர திருவிழாவை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி, அம்மாபட்டி கிராமத்தில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட ஏழு அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பின்னர் கிராமத்தினர் தங்கள் அம்மன்களை பெற்றுக் கொண்டு அவரவர் கிராமத்திற்கு திரும்பினர். இந்நிலையில் சப்பர தேர்களில் எழுந்தருளிய அம்மன்களை, கிராம மக்களும் ஒன்றுகூடி இழுத்து தரிசனம் செய்தனர்.