வருங்காலத்தில் அதிக முதியோர் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற 16-வது நிதிக்குழு ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மாநிலங்களுக்கான வரி பகிர்வை 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், 50% வழங்கினால் மட்டுமே மாநிலங்கள் நிதி மேலாண்மையில் சுய ஆட்சியோடு செயல்பட முடியும் என தெரிவித்தார். வரி பகிர்வு குறைவதால் மாநிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.
இயற்கை பேரிடர் தாக்கத்தால் தமிழகம் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், மாநிலத்தின் கட்டமைப்பு வசதிகள் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தமிழ்நாடு மக்கள் தொகையின் சராசரி வயது 36.4 ஆக உள்ளதாகவும், வருங்காலத்தில் நாட்டிலேயே அதிகளவு வயதானவர்களை கொண்ட மாநிலமாக தமிழகம் இருக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். வளர்ச்சித் திட்டங்களை அதிகளவில் செயல்படுத்த வேண்டிய சூழலில் தமிழகம் உள்ளதாகவும் ஸ்டாலின் கூறினார்.