ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. PERTH மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்த நிலையில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.