இந்திய அரசியல் சாசன தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதேநேரம் இந்த ஆண்டு, அரசியல் சாசனம் ஏற்கப்பட்ட 75ஆம் ஆண்டாகும்.
எனவே, கூடுதல் சிறப்புடன் இந்நாளை கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அங்குதான் அரசியல் நிர்ணய சபை, நாட்டின் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொண்ட நிகழ்வு நடைபெற்றது. அரசியல் சாசன தினத்தையொட்டி உச்சநீதிமன்றத்திலும் இன்று சிறப்பு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. உச்சநீதிமன்றத்தின் நிர்வாக கட்டடத்தில் உள்ள அரங்கில் மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.