ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பாலத்தின் 12-வது தூணின் பக்கவாட்டு சுவர் சேதமடைந்து, கம்பிகள் வெளியே தெரிவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவுப்பகுதியையும், மண்டபம் நிலப் பகுதியையும் இணைக்கும் பாம்பன் பாலம் கடந்த 1988-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. கடலுக்கு நடுவில் 2 புள்ளி 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு 44 தூண்கள் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த பாலம் 36 ஆண்டுகளை கடந்துள்ளது.
இந்த நிலையில் பாலத்தின் 12-வது தூணின் பக்கவாட்டு சுவர் உடைந்து சேதமடைந்துள்ளது. மேலும் கம்பிகள் வெளியே தெரிவதால், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு பாலத்தை சரிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.