வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
வங்கதேசத்தில் அன்மைக்காலமாக இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வங்கதேசத்தில் உள்ள இந்து அமைப்பின் தலைவரை அந்நாட்டு போலீசார் 18 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கதேசத்தில் உள்ள இந்து அமைப்புகள் வலியுறுத்தின. இதன் எதிரொலியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது வங்கதேசத்தில் நடைபெறும் வன்முறை குறித்து பிரதமரிடம் ஜெய்சங்கர் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது.