சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை தவெக தலைவர் விஜய் வெளியிட்டார்.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி என்பதால், அரசியல் அரங்கில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக எதிர்பார்ப்பு இருந்தது. விழாவில் பங்கேற்ற தவெக தலைவர் விஜய், ’எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ எனும் புத்தகத்தை வெளியிட, முதல் பிரதியை அம்பேத்கர் பேரன் ஆனந்த் டெல்டும்டேவும், இரண்டாம் பிரதியை ஓய்வுபெற்ற நீதிபதி சந்துருவும் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க இயலாமல் போனதற்கு கூட்டணி கட்சிகள் கொடுத்த அழுத்தம்தான் காரணம் என்று விஜய் கூறியுள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலில் இருமாப்புடன் 200 தொகுதிகளை வென்றுவிடுவோம் என்று கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கிவிடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
சமூக நீதி பேசும் திமுக அரசு வேங்கைவயல் சம்பவத்தில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் விஜய் குறிப்பிட்டார்.