சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி : காலிஸ்தான் பயங்கரவாதி கைது - சிறப்பு தொகுப்பு!
Sep 12, 2026, 01:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுக்பீர் சிங் பாதலை சுட்டுக்கொல்ல முயற்சி : காலிஸ்தான் பயங்கரவாதி கைது – சிறப்பு தொகுப்பு!

Murugesan M by Murugesan M
Dec 7, 2024, 08:00 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீக்கிய மத நிந்தனைக்கான தண்டனை பெற்ற பஞ்சாபின் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இது தொடர்பாக நரேன் சிங் சௌரா என்ற காலிஸ்தான் தீவிரவாதியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை சிரோமணி அகாலி தளம் ஆட்சியில் இருந்தது. சிரோமணி அகாலி தளம் ஆட்சியில், பிரகாஷ் சிங் பாதல் முதல்வராக இருந்தார். அவரது மகனான சுக்பிர் சிங் பாதல், பஞ்சாபின் துணை முதல்வராக இருமுறை பதவி வகித்துள்ளார்.

2007ம் ஆண்டில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சீக்கிய மதத்தை அவமதித்துப் பேசியிருந்தார். சீக்கிய மதத்தை நிந்தனை செய்த, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவருக்கு, அப்போதைய துணை முதல்வரான சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

சீக்கிய மதத்தின் உயர் அமைப்பான அகாலி தக்த் இந்த விவகாரத்தை விசாரித்தது. குற்றங்களை ஒப்புக்கொண்ட சுக்பிர் சிங் பாதல், அகாலி தக்த் முன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

விசாரணையில், பிரகாஷ் சிங் பாதல், சுக்பிர் சிங் பாதல், 2015 ஆம் ஆண்டு கேபினட் அமைச்சர்கள் உட்பட சிரோன்மணி அகாலி தளத்தின் மையக் குழு உறுப்பினர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். பிரகாஷ் சிங் பாதல் மறைந்துவிட்டதை அடுத்து, அவருக்கு முன்பு வழங்கப்பட்ட “சீக்கிய சமுதாயத்தின் பெருமை” எனும் பட்டம் திரும்பப் பெறப்பட்டது.

கழிவறைகளை சுத்தம் செய்யவும், சமையலறையில் பணியாற்றவும்,பாத்திரங்களை சுத்தம் செய்யவும் தினசரி சீக்கிய பிரார்த்தனை செய்யவும் மற்றும் பக்தர்களின் காலணிகளை துடைக்கவும் உத்தரவிடப்பட்டது. தண்டனையின் அடிப்படையில் அவர்கள் கழுத்தில் பலகைகள் தொங்கவிடப்பட்டிருந்தன.

உடல்நலக் குறைவின் காரணமாக, சுக்பீர் பாதல் மற்றும் சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோர் பொற்கோயில் வாசலில் இரண்டு நாள்களுக்கு வாயில் காப்பாளர்களாகப் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டனர்.

தண்டனையை ஏற்கும் விதமாக சுக்பீர் சிங் பாதல் அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சக்கர நாற்காலியில் வந்தார். குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் தன் மாட்டிக்கொண்டு கையில் ஈட்டி ஏந்தியபடி பொற்கோயில் வாசலில் சேவகராக தண்டனையை நிறைவேற்றினார்.

மேலும், பஞ்சாப் முன்னாள் அமைச்சர்கள் பிக்ரம் சிங் மஜிதியா மற்றும் தல்ஜித் சிங் சீமா ஆகியோரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான அட்டையை கழுத்தில் மாட்டிக்கொண்டு தண்டனைகளை நிறைவேற்றினார்கள்.

ஒரு கையில் ஈட்டியை ஏந்தியபடி, நீல நிற சேவகர் சீருடையில், சக்கர நாற்காலியில் பொற்கோயில் வாசலில், தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்த சுக்பிர் சிங் பாதல் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. துப்பாக்கி சூடு நடத்திய நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காலிஸ்தான் தீவிரவாதி நரேன் சிங் சௌரா என அடையாளம் காணப்பட்டுள்ளார். தேரா பாபா நானக் பகுதியை சேர்ந்த இவர், தீவிரவாதிகள் ஜக்தர் சிங் தாரா மற்றும் தேவி சிங் ஆகியோருடன் புரைல் சிறையில் இருந்து தப்பியது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது

Tags: Khalistani terroristFormer Punjab Deputy Chief MinisterSukhbir Singh BadalNarain Singh ChauraShiromani Akali Dalsurvived
Share
Tweet
SendShare
Previous Post

உஷார் மக்களே…. இந்தியாவை குறி வைக்கும் மொபைல் மால்வேர் தாக்குதல் – சிறப்பு தொகுப்பு!

Next Post

200 தொகுதிகளில் வெற்றி என கூறுபவர்களை மக்கள் மைனஸ் ஆக்கி விடுவார்கள் – தவெக தலைவர் விஜய் பேச்சு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies