கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே புயலால் பாதிக்கப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஆர்எஸ்எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் நிவாரண உதவிகளை வழங்கினர்.
ஃபெஞ்சல் புயலில் திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர், மனம்பூண்டி, அந்திலி உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் சேவா பாரதி அமைப்பினர் இணைந்து உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகளை வழங்கினர். மேலும் கடந்த 4 நாட்களாக பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளையும் செய்து வருகின்றனர்.