கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6-ம் தேதி மத்திய குழு சென்னை வருகை தந்தது. மத்திய உள்துறை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையில் 6 அதிகாரிகள் இந்த மத்திய குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர், இன்று கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தனர். பகண்டை கிராமத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை பார்வையிட்ட மத்திய குழுவினர், தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.