தொழிலதிபர் அதானியை தான் சந்திக்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், தமிழகத்தில் அதானி முதலீடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கனவே பல முறை விளக்கம் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
தமிழகத்திற்கும் அதானிக்கும் எந்த வித சம்மந்தமும் கிடையாது. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை. நான் அவரை பார்க்கவும் இல்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.ஆனால் முதல்வர் பதில் திருப்பதியாக இல்லை என கூறி பாமக உறுப்பினர்கள் வெளிநடப்பில் ஈடுபட்டனர்.