வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து டெல்லியில் அந்நாட்டின் தூதரகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வங்கதேசத்தில் முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்த பிறகு இந்துக்கள் தொடர்ச்சியாக துன்புறுத்தலுக்கு ஆளாகினர். இதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட வங்கதேச இஸ்கான் தலைவர் சின்மய் கிருஷ்ண தாஸ் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச இந்துக்கள் மீதான அடக்குமுறையைக் கண்டித்து டெல்லியில் அந்நாட்டின் தூதரகத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வங்கதேச இந்துக்களின் அடிப்படை உரிமைகளை காக்க சர்வதேச தொண்டு நிறுவனமான அம்னீஸ்டி இன்டர்நேஷனல் தலையிட வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டனர்.