இண்டி கூட்டணிக்கு மம்தா தலைமையேற்க பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடுத்தடுத்து பின்னடவை சந்தித்ததால், இண்டி கூட்டணியை தலைமையேற்று வழிநடத்த தாம் தயாராக இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
ஏற்கெனவே ராகுல் காந்தியின் தலைமைத்துவம் மீது கேள்வி எழுந்த நிலையில், மம்தா பானர்ஜிக்கு இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வெளிப்படையான ஆதரவை அளித்தார்.
இதேபோல ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவும் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு தெரிவித்ததுடன், வேறுபாடுகளை மறந்து மம்தாவுக்கு வலியுறுத்தினார்.