திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இரவு முழுவதும் பெய்த கனமழையால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நேற்று இரவு முதல் மிக கனமழை பெய்து வருவதால் மேல்மலை கிராமமான கவுஞ்சி, கிளாவரை ,போளூர், ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்து வந்ததால் பெருங்காடு, மற்றும் மூங்கில் காடு, கோம்பை பகுதியில் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் வட கவுஞ்சி ஊராட்சிக்கு உட்பட்ட செம்ரன் குளம் பகுதியில் சாலையை கடக்க முடியாத அளவிற்கு காற்றாற்று வெள்ளம் செல்வதாலும் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியனர்.
அத்தியாவசிய தேவைக்காக மற்றும் மருத்துவ தேவைக்காக வெளியேற முடியாமல் தவித்து வருகின்றன.