இந்தியாவில் சிறுபான்மையினர் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதில்லை என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அரசியலமைப்புச் சட்ட விவாதத்தை தொடங்கி வைத்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிற நாடுகளான ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.
பிற நாடுகளில் பாதிப்புக்கு உள்ளாகும் சிறுபான்மையினர் பாதுகாப்புக்காக வந்தடையும் நாடு இந்தியா தான் எனவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலமைப்பை இன்று எதிர்கட்சியினர் அவமதித்து விட்டதாகவும், அதன் இயல்பை மாற்றி விட்டதாகவும் தெரிவித்தார்.