மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர் கன மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேலும் மூன்று நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது
அதன்படி 15,16,17 ஆகிய தேதிகளில் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கடந்த இரு தினங்களாக மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.