அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் - சிறப்பு தொகுப்பு!
Oct 23, 2025, 08:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அச்சுறுத்தும் பாக்டீரியா : எச்சரிக்கும் மருத்துவர்கள் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 4, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் தற்போது ஸ்கரப் டைபஸ் எனும் பாக்டீரியா தொற்று பரவி வரும் நிலையில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் ஸ்கரப் நோயின் அறிகுறிகள் குறித்தும், அதிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டிய வழிகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் தற்போது பார்க்கலாம்.

ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்ற ஒட்டுண்ணியால் பரவும் ஸ்கரப் டைபஸ் எனும் வைரஸ் காய்ச்சல்  இந்தியாவில் முதன்முறையாக உத்திரப்பிரதேசத்தில் தான் கண்டறியப்பட்டது.

2021 ஆம் ஆண்டு பரவிய மர்மக் காய்ச்சல் தொடர்பான சோதனையில் ஸ்கரப் டைபஸ் காய்ச்சல் என உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்றவை ஏற்படும் எனவும், உடலின் பல்வேறு இடங்களில் கருப்புக் கொப்பளங்கள் போல உருவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் வேலூர், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு. ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் சிலர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்கரப் டைபஸ் என்பது பூச்சிக்கடியால் ஏற்படும் நோய் என்பதால் விவசாயத்தில் ஈடுபடுவோர் அதிகமாக இந்நோய்க்கு பாதிக்கப்படக் கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

எனவே விவசாயம், புதர் நிறைந்த பகுதிகளில் இருப்பவர்கள், காடுகளில் வேலை செய்வோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.  ஒருவருக்கு தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாக காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் எனவும்,  ஸ்கரப் டைபஸ் நோய்த்தொற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டால், டாக்ஸிசிலின், அசித்ரோமைசின், ரிஃபாம்பிசின் உள்ளிட்ட மருந்துகளை நோயாளிகளின் உடல்நிலை மற்றும் வயதுக்கு ஏற்ற வகையில் வழங்க வேண்டும் எனவும்,  48 மணி முதல் 72 மணிக்குள்ளாக உடல்நிலை சீரடையவில்லை என்றால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags: Scrub TyphusPublic Health Departmentsymptoms of scab diseaseviral feverOrientia tsutsugamushiTamil NaduIndiauttar pradesh
ShareTweetSendShare
Previous Post

திமுக மீது தொடரும் அதிருப்தி : கூட்டணியை விட்டு வெளியேறும் கட்சிகள்? – சிறப்பு கட்டுரை!

Next Post

அமைச்சர் துரைமுருகன் இல்லத்தின் கதவை கடப்பாரையால் உடைத்து அமலாக்கத்துறை சோதனை : 2-வது நாளாக தொடரும் ஆய்வு!

Related News

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

78,000 கோடி நிதி எங்கு சென்றது : முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – அண்ணாமலை

திமுக அரசின் அலட்சியத்தால் டெல்டா மாவட்டங்களில் 20 லட்சம் டன் நெல் வீண் – எல். முருகன்

ராஜஸ்தான் : பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய மாவட்ட நீதிபதி!

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் சாலைகள் சேதம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி!

மாங்காடு அருகே மழைநீரில் மூழ்கி பெண் குழந்தை உயிரிழப்பு!

குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சென்னை சாலைகள்!

புதிய வகை சைபர் குற்றத்தை வெளிச்சமிட்டு காட்டிய சமூக ஊடகங்கள்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தகர்த்த உக்ரைன்!

விருத்தாசலத்தில் அதிகாரிகளின் அலட்சியத்தால் முளைத்து சேதமடைந்த நெற்பயிர்கள்!

கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக் கூடாது – இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நெல் ஈரப்பதம் : ஆய்வு நடத்த குழு அமைப்பு – மத்திய அரசு

திருச்சி : அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கிச் சேதம் – விவசாயிகள் வேதனை!

கட்டுக்குள் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies