தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்! : தமிழக அரசை கண்டித்த எல். முருகன்
Oct 22, 2025, 03:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழக சட்டசபையில் அவமதிக்கப்பட்ட தேசிய கீதம்! : தமிழக அரசை கண்டித்த எல். முருகன்

Web Desk by Web Desk
Jan 6, 2025, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக சட்டசபையில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு தமிழக அரசை மத்திய அமைச்சர் எல். முருகன் வன்மையாக கண்டித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்று தொடங்கிய தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதற்கு, தமிழக அரசிற்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உரையுடன் தொடங்குகின்ற சட்டப்பேரவை நிகழ்வின் போது, அனைத்து மாநிலங்களும் தேசிய கீதம் ஒலிக்கச் செய்வது இயல்பு மற்றும் நமது கடமை ஆகும். ஆனால், தமிழக சட்டப் பேரவையில் மட்டும், மாண்புமிகு தமிழக ஆளுநருக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பதற்காகவே, தொடர்ந்து தேசிய கீதம் அவமதிக்கப்படுவது போன்ற நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது.

தமிழக மக்களின் நலனுக்கு தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, இதுபோன்ற தேவையற்ற அரசியல் செய்து கொண்டிருக்கும் இந்தப் போலி திராவிட மாடல் அரசு, தேச விரோதமாக நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல.

மேலும், மாண்புமிகு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் தேசிய கீதம் இசைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தும் அதை ஏற்க மறுத்த சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களின் போக்கு மிகுந்த கண்டனத்திற்கு உரியது.

சபாநாயகர் என்பவர் சட்டசபையில் பொதுவானவராகவே செயல்பட வேண்டுமே தவிர, திமுக என்ற ஒரு கட்சிக்கு ஒற்றை சார்பாளராக இயங்குவது நியாயமற்ற ஒன்றாகும். தமிழக ஆளுநர் அவர்களுடன் முரண்பட்டு அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்படும் போக்கை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: DMKMK StalinL. Murugan strongly criticized the Tamil Nadu government.tn govtNational Anthem insulted in Tamil Nadu Assembly! : L Murugan condemned the Tamil Nadu government.
ShareTweetSendShare
Previous Post

இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிரோடு வந்ததால் பரபரப்பு!

Next Post

நேரலை துண்டிக்கப்பட்டது தொழில்நுட்பக் கோளாறாக இருக்கலாம்! : சபாநாயகர் அப்பாவு

Related News

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

திருப்பத்தூர் : பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – பக்தர்களை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

தஞ்சையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்!

ஈரோடு : தள்ளுபடி துணிகளை வாங்க குவிந்த வரும் மக்கள்!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies