மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்ட நபர் உயிருடன் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மருதூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்துகிடந்தார். இந்நிலையில், இறந்து கிடப்பது அதே கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் தான் என உறுதிப்படுத்திய உறவினர்கள், இறுதிச்சடங்கு செய்து உடலை தகனம் செய்துள்ளனர்.
இதனிடையே வேலை தொடர்பாக திருப்பூர் சென்றிருந்த செல்வராஜ் மீண்டும் மருதூர் கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.
அப்போது, அவரை கண்டு மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.