சட்டப்பேரவை நேரலை துண்டிக்கப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என சபாநாயகர் அப்பாவு பதிலளித்துள்ளார்.
நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் நிறைவுபெற்ற பின் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது ஒவ்வொரு ஆண்டும் ஆளுநர் உரை நேரலையில் ஒளிபரப்பப்படும் நிலையில், இம்முறை ஏன் நேரலை துண்டிக்கப்பட்டது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், நேரலை துண்டிக்கப்பட்டதற்கு தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இருக்கலாம் என பதலளித்த சபாநாயகர் அப்பாவு, இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.