ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சியை பார்வையிட்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் உறுதியாக வராது என மத்திய அரசு தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார்.
இதனை தமிழக அரசு தெளிவுபடுத்தாது ஏன் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் மதுரையில் போராடும் விவசாயிகளை சந்திக்க தயங்குவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை திமுக கேவலப்படுத்தாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்துவதை ஏற்கமுடியாது என்றும், உட்கட்சி பூசலை மறைக்க திமுக தலைவர்கள் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்துவதாகவும் அவர் கூறினார்.
எதிர்கட்சிகளின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் காவல்துறை திமுக போராட்டத்திற்கு அனுமதி அளிப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.