மனித வாழ்வில் தவறுகள் தவிர்க்க முடியாதவை என தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல என தெரிவித்துள்ளார்.
முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். Zerodha இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கிய இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சியில், பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி மனம் திறந்துள்ளார்.
அதில் தான் குஜராத் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தை நினைவுகூர்ந்த மோடி, தவறுகள் தவிர்க்க முடியாதவை என தெரிவித்துள்ளார். மேலும், தானும் ஒரு மனிதன்தான், கடவுள் அல்ல எனவும் அவர் பேசியிருக்கிறார். விரைவில் இந்த நிகழ்ச்சி வீடியோ வெளியாக உள்ள நிலையில் அதன் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.