ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு தற்போது அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
இளைஞர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே தேர்ந்தெடுத்த துறையில் பிரகாசிக்க முடியும் எனவும் அவர் கூறினார். இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்தார்.