டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளன என்பது குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தம் கிடைத்தது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
டாவோஸ் உலக பொருளாதார கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எந்த புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடவில்லை என்றும், இந்தக் கூட்டத்தில் திராவிட மாடல் அரசு சாதித்தது என்ன எனவும் கேட்டுள்ளார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டிய இபிஎஸ், உண்மையான முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நாடி வருவதாக தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதனால் முதலீடுகள் குறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.