கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!
Jul 23, 2025, 07:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, திமுக தொழில்துறையினரை ஏமாற்றுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Jan 27, 2025, 05:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தொடர்ச்சியாக மின் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை இன்னலுக்குள்ளாக்கிக் கொண்டிருக்கும் திமுக, விளம்பரத்துக்காக, கண்துடைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரையும் ஏமாற்றி வருகிறது. இதனால் சிறு, குறு, நடுத்தர தொழில்முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோயம்புத்தூரில் மட்டும் 12kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சுமார் 52,367 சிறு தொழிற்சாலைகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் திமுக அரசின் மின்கட்டண உயர்வால், இந்தச் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. எனவே, இந்தச் சிறு தொழில்களுக்கான மின்சார இணைப்பு வகையை III (B) ல் இருந்து III A (1) ஆக மாற்ற வேண்டும் என்று, தொழில் நிறுவனக் கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்தனர். இதனால், மின் கட்டணம், ஒரு யூனிட்டுக்கு ரூ.9.60 ல் இருந்து ரூ.4.65 ஆகக் குறையும்.

திமுக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்து, பல ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகு, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று, 12 kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை, III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மாற்றுவது குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்தை பெற்ற பின் பரிசீலிக்கப்படும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனை அடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அனுப்பிய கடிதத்தில், 12 kw மின்சுமைக்குக் குறைவாகப் பயன்படுத்தும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கட்டண வகையை, III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மாற்றலாம் என்றும், இந்த மாற்றம், இனி வரும் காலங்களுக்கான மின்கட்டணக் கணக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், இந்த நிறுவனங்கள், 12 kw மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போது, தானியங்கி முறையில், அவர்களுக்கான மின்கட்டணம் III-B பிரிவுக்கு மாற்றப்படும் என்றும், கூறப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, சுமார் ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், இந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம், உயர்த்தப்பட்ட மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இது குறித்து, தொழில் அமைப்புகள் கேள்வி எழுப்பியதற்கு பதிலளிக்கும் வகையில், கடந்த ஜனவரி 23, 2025 அன்று தமிழ்நாடு மின்விநியோகக் கழகம் கோயம்புத்தூர் பகுதியின் தலைமைப் பொறியாளர் அனுப்பியிருக்கும் கடிதத்தில், தானியங்கி முறையில், இந்த 12kw மின்சாரத்தைப் பயன்படுத்தும் தொழில் நிறுவனங்களை, III-A(1) பிரிவுக்கு மாற்றுவது சாத்தியமில்லை என்றும், தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றும், இந்த மாற்றத்திற்காகத், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்துத் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அப்படி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு, விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்துதான் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 அன்று, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தபடி, அப்போதிருந்தே இந்தக் கட்டண மாற்றம் நடைமுறைக்கு வந்ததாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். 12kw மின்சுமைக்கு அதிகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்களை அதிக கட்டணப் பிரிவுக்கு மாற்ற, மென்பொருள் மூலமாகத் தானாகவே மாற்றம் செய்ய இயலும்போது, குறைந்த கட்டணப் பிரிவுக்கு மாற்றம் செய்வதற்கு ஏன் தொழில் நிறுவனங்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது திமுக அரசு? வெறும் கண்துடைப்புக்காக அறிவிப்புகளை வெளியிட்டு, தொழில்துறையினரை ஏமாற்றுவதுதான் நோக்கமா?

12 kW மற்றும் அதற்கும் குறைவான மின்சுமைகளைக் கொண்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, அதிக கட்டணத்தை வசூலித்து வந்திருக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம்.

12kw மற்றும் அதற்குக் குறைவான மின்சுமையைப் பயன்படுத்தும் இந்த நிறுவனங்கள் அனைத்தையும், உடனடியாக III-B வகையிலிருந்து, III-A(1) வகைக்கு மென்பொருள் வாயிலாக, தானியங்கி முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், இதற்கான அறிவிப்பு வெளிவந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இந்த நிறுவனங்களிடம் வசூலித்த அதிகப்படியான கட்டணத்தைத் திரும்ப வழங்க வேண்டும் என்றும், திமுக அரசை அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: k annamalaik annamalai news todayஅண்ணாமலை குற்றச்சாட்டுannamalai bjpk annamalai latest speechannamalai speechtamilnadu news todayannamalai latest speechannamalai latest newsk annamalai speechk annamalai latestannamalai ipstamil janam tvk Annamalai Bjpannamalai newsannamalai dmk filesbjp annamalaibjp k annamalaiannamalai on dmkannamalaiAnnamalai Press Meetk annamalai dmk filesDMKk annamalai interviewk annamalai pcஅண்ணாமலைk annamalai newsdmk vs k annamalai
ShareTweetSendShare
Previous Post

வக்ஃபு வாரியம்: 14 திருத்தங்கள் ஏற்பு!

Next Post

கோவையில் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய பள்ளியின் ஆண்டு விழா கொண்டாட்டம்!

Related News

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

கேரளா : பேருந்து மோதி பெண் பரிதாபமாக உயிரிழப்பு!

வியாழக்கிழமை காலை 11 மணி வரை அவைகள் ஒத்திவைப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் முப்பெரும் விழா!

பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு: தலிபான்களுக்கு ஐ.நா., கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies